Close

Covid19 Prevention – Departmental Welfare Board Relief Measures

தேனி மாவட்டம்.

கொரோனா தடுப்புப் பணிகள் – நிவாரணம் வழங்குதல்.

           தேனி மாவட்டத்தில், கொரோனா தடுப்புப்பணிகள் தொடர்பாக தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பல்வேறு அரசு நலவாரிய உறுப்பினர்களுக்கு, தமிழக அரசு நிவாரணத்தொகை ரூ.1000 /- மற்றும் நிவாரணப்பொருட்கள் வழங்க உத்தரவிட்டு, வழங்கப்பட்டு வருகிறது. வங்கிக் கணக்கு கிடைக்கப்பெறாததால் நலவாரிய உறுப்பினர்களுக்கு நிவாரணத்தொகை வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே, நிவாரணத் தொகையினை பெற்று பயனடையாத பயனாளிகள் குறித்த விவரம், தேனி மாவட்ட ஆட்சியரின் https://theni.nic.in என்ற இணையதளத்தில் நலவாரியம் வாரியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
நவவாரியம் மூலம் அடையாள அட்டை பெற்றுள்ள பயனாளிகள் விவரங்கள் உள்ளவர்கள் மட்டும் கீழ்க்கண்ட விவரப்படியான மின்னஞ்சல் முகவரிக்கு, தங்களது நலவாரிய அட்டையின் முதல் பக்கம் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகணக்கு எண் புத்தகத்தின் முதல் பக்கத்தை அனுப்பிவைக்குமாறு தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

வ.எண் நல வாரிய விவரம் வட்டம் வாரியாக பட்டியல் நிவாரணம் பெற மக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி
1 1. தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள்.
2. தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள்.
3. தமிழ்நாடு அமைப்புச்சாரா ஓட்டுநர்கள்.
4. தமிழ்நாடு சலவைத் தொழிலாளர்கள்.
5. தமிழ்நாடு முடி திருத்துவோர் நலம்.
6. தமிழ்நாடு தையல்தொழிலாளர்.
7. தமிழ்நாடு கைவினைத்தொழிலாளர்.
8. தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள்.
9. தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைத்தறிப்பட்டு.
10. தமிழ்நாடு காலணி தோல் பொருட்கள்உற்பத்தி தொழிலாளர்கள்.
11. தமிழ்நாடு ஓவியர் நலம்.
12. தமிழ்நாடு பொற்கொல்லர் நலம்.
13. தமிழ்நாடு மண்மாண்டத் தொழிலாளர்.
14. தமிழ்நாடு வீட்டுப்பணியாளர் நலம்.
15. தமிழ்நாடு விசைத்தறி நெசவாளர்.
16. தமிழ்நாடு பாதையோர வணிகள் மற்றும் கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரிவோர் நலம்.
17. தமிழ்நாடு சமையல் தொழிலாளர் நலம்.
ஆண்டிபட்டி

பெரியகுளம்

உத்தமபாளையம்

போடிநாயக்கனூா்

தேனி

aclaundipatti@gmail.com

aclperiyakulam@gmail.com

acluthamapalayam@gmail.com

acllabourbodi@gmail.com

labourssstheni@gmail.com

2 பதிவு பெற்ற மீனவர்கள் தேனி மாவட்ட அனைத்து வட்டங்கள் adfvaigai@gmail.com
3 1. பழங்குடியின தொழிலாளர்கள்.

2. பதிவு பெற்ற புதிரை வண்ணான்.

 

தேனி மாவட்ட அனைத்து வட்டங்கள்

 

dadwthn@nic.in
4 1. நரிக்குறவர்

 

 

2. உலமாக்கள்

 

 

 

3. சீர்மரபினர்

 

 

 

 

தேனி மாவட்ட அனைத்து வட்டங்கள்

 

தேனி மாவட்ட அனைத்து வட்டங்கள்

 

 

ஆண்டிபட்டி

பெரியகுளம்

உத்தமபாளையம்

போடிநாயக்கனூா்

தேனி

கம்பம்

dbcmwo.tnthn@nic.in
5 1. சிறு வணிகர்கள்.

 

 

2. நாட்டுப்புற கலைஞர்கள்.

 

 

3. கிராம கோயில் பூசாரிகள்.

தேனி மாவட்ட அனைத்து வட்டங்கள்

 

தேனி மாவட்ட அனைத்து வட்டங்கள்

 

தேனி மாவட்ட அனைத்து வட்டங்கள்

paactheni@gmail.com
6 பதிவு பெற்ற திருநங்கைகள். தேனி மாவட்ட அனைத்து வட்டங்கள் dswotheni@gmail.com