PM Kisan – List of Farmers not enrolled
பிரதம மந்தியின் விவசாயிகள் கௌரவ ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் (PM – KISAN)
இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான தகுதிகள்:
1.இத்திட்டத்தின் தகுதி நாள் 01.02.2019 ஆகும். 01.02.2019 அன்று தங்களது பெயரில் நிலம் உள்ளவா்கள் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் பயன்பெற பதிவு செய்ய தகுதியுடையவராவா்கள்.
2.விவசாயிகள் தங்களது பெயரில் உள்ள பட்டா நகல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றினை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் அளித்து இத்திட்டத்தின் கீழ் பயன் பெற பதிவு செய்யலாம்.
3.இத்திட்டத்தின் கீழ் சிறு, குறு மற்றும் பெரிய என அனைத்து விவசாயிகளும் பயன்பெற பதிவு செய்யலாம்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியற்ற விவசாயிகள்
1.நிறுவனத்தின் பெயரில் உள்ள நிலத்தின் உரிமையாளா்கள்.
2.அரசியலமைப்பு பதவிகளில் குடும்ப உறுப்பினர்கள் எவரேனும் இருத்தல்.
3.முன்னாள் / இன்னாள் அமைச்சா்கள், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள், மாநகராட்சி மேயா்கள், நகராட்சி மற்றும் மாவட்ட ஊராட்சி தலைவா்கள்.
4.மத்திய / மாநில அரசுப்பணி / பொதுத்துறை நிறுவனங்கள்/உள்ளாட்சி அமைப்புகளில் பணியில் உள்ளோர்; /ஓய்வு பெற்றோர் (தொகுதி 4 பணியாளா் நீங்கலாக)
5.ரூ..10,000/-க்கு மேல் ஓய்வூதியம் பெறுபவா்கள்.
6.கடந்த கணக்கீட்டு வருடத்தில் வருமான வரி செலுத்தியவா்கள்.
7.மருத்துவா்கள்/பொறியாளா்கள்/வழக்கறிஞா்கள்/ பட்டயக் கணக்காயா்கள் போன்ற தொழில்முறை அலுவலா்கள்.
தேனி மாவட்டத்தில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டத்தின்; (PM – KISAN) கீழ் விவசாயிகள் கௌரவ ஊக்கத் தொகை பெற பதிவு செய்யப்படாத விவசாயிகளின் பட்டியல் வட்டம், கிராம வாரியாக கீழ்க்கண்டவாறு பட்டியலிடப்பட்டுள்ளது.
கீழ்காணும் பட்டியலில் உள்ள விவசாயிகள். இ்த்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுடைய விவசாயி எனில், தங்களது ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் பட்டா நகல் ஆகியவைகளுடன் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் அளித்து இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.