கோவிட்-19
கொரோனா வைரஸ் பற்றி
கொரோனா வைரஸ்கள் என்பவை பெரிய வைரஸ் குடும்பத்தை சார்ந்தவை. இவை சாதாரண சளி முதல் MERS-CoV மற்றும் SARS-CoV போன்ற கடுமையான மூச்சுத்திணறல் நோய்கள் வரை உருவாக்கக்கூடிய குணம் கொண்டவை. இவற்றுள், கொரோனா வைரஸ் நோய் என்பது 2019 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை வைரஸ் நோய் ஆகும். இந்நோய் இதற்கு முன்னர் மனிதர்களிடம் அடையாளம் காணப்படவில்லை. கொரோனா வைரஸ்கள் விலங்குகளிடம் காணப்படுபவை. இவை விலங்குகளிடம் இருந்துதான் மனிதர்களுக்கு பரவியிருக்க வேண்டும். விரிவான ஆய்வின் முடிவில், SARS-CoV புனுகு பூனைகளிலிருந்து மனிதர்களுக்கும், MERS-CoV ஒட்டகங்களிலிருந்து மனிதர்களுக்கும் பரவியது கண்டபிடிக்கப்பட்டது. பல வகை கொரோனா வைரஸ்கள் விலங்குகளிடம் காணப்பட்டாலும், அவை அனைத்தும் மனிதர்களுக்கு பரவியதாக இதுவரை தகவல் இல்லை. மூச்சுக்குழல் அழற்சி, காய்ச்சல், இருமல், மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவை இந்நோய்த் தொற்றின் பொதுவான அறிகுறிகள் ஆகும். மேலும் இந்நோய் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு, நிமோனியா, கடுமையான சுவாச நோய்கள், சிறுநீரக செயலிழப்பு மற்றும் இறப்பும் கூட ஏற்படுத்தலாம். கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க அடிக்கடி கை கழுவுதல், மற்றும் இருமும் போதும் தும்மும் போதும் வாய் மற்றும் மூக்கை மூடுதல், நன்கு சமைக்கப்பட்ட இறைச்சி மற்றும் முட்டைகளை உண்ணுதல் ஆகியவையே சிறந்த வழிகளாகும். மேலும் காய்ச்சல், இருமல், தும்மல் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற நோயின் அறிகுறிகள் உள்ளவர்களிடமிருந்து குறைந்தபட்சம் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு இருக்கவேண்டும். ஆதாரம்: உலக சுகாதார நிறுவனம்
புதியவை
- மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்குகளை திறந்து வைத்தார். 12.01.21
- தேனி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு ஊசி வழங்குவதற்கான ஒத்திகை நடவடிக்கை.08.01.21
- மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் பறவை காய்ச்சல் முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகள் தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். 06.01.2021
- தேனி மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது -மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் தகவல். 06.01.21
- சிறப்பு சுருக்க திருத்த பணிகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம். 31.12.20
- மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் பொங்கல் திருநாளை முன்னிட்டு ரூபாய் 2,500 /- ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி, சேலைகளை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். 30.12.20
- தேனி மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 30.12.20