அருள்மிகு ஸ்ரீகௌமாரியம்மன் திருக்கோவில்
அருள்மிகு ஸ்ரீகௌமாரியம்மன் திருக்கோவில் முல்லை பெரியார் ஆற்றுப்படுகையில், வீரபாண்டி கிராமத்தில் தேனியிலிருந்து மேற்கில் 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. பாண்டிய மன்னன் ஸ்ரீ வீரபாண்டி அவா்கள் அம்மனையும், கண்ணீஸ்வரமுடையாரையும் பிரார்த்தனை செய்து கண் பார்வை மீண்டும் பெற்றதன் நினைவாக கி.பி.14-ஆம் நூற்றாண்டில் இத்தலத்தில் ஸ்ரீகௌமாரியம்மன் திருக்கோவிலைக் கட்டியுள்ளார். இத்திருக்கோவில் இம்மாவட்டத்தின் முதன்மையான புனித தலமாகும். தமிழ்நாட்டில் உள்ள 108 அம்மன் கோவில்களில் ஒன்றாகும். இத்திருத்தலத்தில் நடைபெறும் சித்திரை திருவிழா, அக்கினி / கத்தரி வெயில் ஏற்படுகின்ற நாட்களில் நடைபெறும், பக்தா்கள் வெள்ள கதிர்வீச்சால் ஏற்படுகின்ற நோய்களான பெரியம்மை, சின்னம்மை மற்றும் ஒவ்வாமை போன்ற நோய்களிலிருந்து பாதுகாக்க அக்கினிசட்டி எடுத்தும், சேற்றாண்டி வேசமிட்டும், மஞ்சள் நீராடியும், ஆயிரம் கண் பானைகள் எடுத்தும், நெய் விளக்கு ஏற்றியும் வழிபட்டு ஆசிர்வாதம் பெறுவது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்
புகைப்பட தொகுப்பு
அடைவது எப்படி:
வான் வழியாக
மதுரை விமான நிலையம் அருகில் உள்ளது .
தொடர்வண்டி வழியாக
மதுரை ரயில் நிலையம் அருகில் உள்ளது .
சாலை வழியாக
மதுரை -உசிலம்பட்டி -ஆண்டிபட்டி வழியாக தேனி வந்து அடையலாம்