மாவட்டம் பற்றி
தேனி மாவட்டம் தமிழ்நாட்டின் தென்பகுதியில் மேற்கு தொடர்ச்சிமலைகள் சூழ அமைந்த இயற்கை எழில்மிகு மாவட்டம் ஆகும். அரசாணை பல்வகை எண்-679-வருவாய்த்துறை-நாள்.25.07.1996 ன்படி மதுரை மாவட்டத்திலிருந்து தேனி மாவட்டத்தை புதிதாக பிரிப்பதற்கு ஆணையிடப்பட்டதை தொடர்ந்து அப்போதிருந்த பெரியகுளம் வருவாய் கோட்டத்தில் அடங்கிய பெரியகுளம் தாலுகாவில் இருந்து புதிய தேனி தாலுகா பிரிக்கப்பட்டு உத்தமபாளையம் தாலுகாவிலிருந்து புதிதாக போடிநாயக்கனூர் ஏற்படுத்தப்பட்டும் உத்தமபாளையம் போடிநாயக்கனூர் வருவாய் கோட்டங்களை உள்ளடக்கிய உத்தமபாளையம் வருவாய் கோட்டம் உருவாக்கப்பட்டும் தேனி மாவட்டம் உருவாக்கப்பட்டு 01.01.1997 முதல் தேனி மாவட்டம் செயல்பட தொடங்கியது. மேற்படி அரசாணையின்படி தேனி மாவட்டம் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட சிறப்பு அலுவராக நியமனம் செய்யப்பட்ட திரு.கே.சத்தியகோபால் இ.ஆ.ப., அவர்களை 01.01.1997 தேனி மாவட்ட பிரிவினைக்கு பின் முதல் ஆட்சியராக பதவி வகித்தார். தேனி மாவட்டத்தில் பெரியகுளம் வட்டத்தில் வைகைஅணை, கும்பக்கரை நீர்வீழ்ச்சி, உத்தமபாளையம் வட்டத்தில் சுருளி நீர்வீழ்ச்சி ஆகிய முக்கிய சுற்றுலாத் தளங்கள் ஆகும். தேனி வட்டம், வீரபாண்டி கிராமம் கௌமாரியம்மன் கோவில், உத்தமபாளையம் வட்டம் குச்சனூர் சனீஸ்வர பகவான் திருக்கோவில் ஆகியவை இம்மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருக்கோயில்களாகும்.