மூடு

மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம்

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தேனி

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம்

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலமாக வேலைநாடுநர்களுக்கு பல்வேறு துறைகளில் இலவச பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. தேனி மாவட்டத்தில் திறன் பயிற்சி வழங்கும் நிறுவனங்கள் கீழ்கண்டவாறு.

வ.எண் பயிற்சி வழங்கும் நிறுவனத்தின் பெயர் பயிற்சியின் விபரம்
1. நேஷனல் ட்ரெய்னிங் இன்ஸ்டிடியுசன், கம்பம் சர்டோசி
2. வி.ஓ.சி இன்டஸ்ட்ரியல் ட்ரெய்னிங் சென்டர். சின்னமனூர். சர்டோசி
3. செயினட் அன்னீஸ் ஒகேசனல் ட்ரெய்னிங் சென்டர், தாமரைக்குளம், பெரியகுளம். பேசிக் ஸூயிங் ஆப்பரேட்டர்
4. ரியல் சொசைட்டி ட்ரெய்னிங் சென்டர், கைலாசபட்டி, பெரியகுளம். பேசிக் ஸூயிங் ஆப்பரேட்டர்
5. நலம் ஹாஸ்பிடல், தேனி. டையட் அசிஸ்டன்ட்,ஆப்ரேசன் தியேட்டர், டெக்னீசியன்,ஜெனரல் ட்யூட்டி அசிஸ்டன்ட்,மெடிக்கல் லெபாரட்டரி டெகனீசியன்
6. சிவகாமி உமன் டெவலப்மென்ட் ட்ரெஸ்ட், சின்னமனூர் பேசிக் ஸூயிங் ஆப்பரேட்டர்
7. டீம் வி.ஐ.பி.(டெக்னீசின் அல்லது அல்லது அவோ்னஸ் ’மூவமென்ட), இந்திராநகர், உத்தமபாளையம் சர்டோசி
8. கேட், கே கம்ப்யூட்டர்ஸ், கம்பம். பேசிக் ஸூயிங் ஆப்பரேட்டர்
9. அப்பல்லோ, மெட் ஸ்கில்ஸ், கம்பம் Mg;Nurd; jpNal;lh; mrp];ld;l

மேற்காணும் நிறுவனங்கள் வேலை நாடுநர்களுக்கு திறன் பயிற்சி வழங்கி வருகின்றன’ர். பயிற்சியில் கலந்த கொள்பவர்களுக்கு நாள் ஒன்றுக்கு போக்குவரத்து செலவு ரூ.100(ரூபாய் நூறு மட்டும்) வழங்கப்படும்.
மேற்காணும் பிரிவுகளில் வேலைநாடுநர்கள் பயன்பெறும் வகையில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 23.03.2017 முதல் 30.05.2017 வரை (REAL Society Training Centre கைலாசப்பட்டி, பெரியகுளம் வட்டம், என்கிற திறன் மேம்பாட்டு பயிற்சி நிலையத்தின் மூலமாக 19 பயன்தாரர்களுக்கு Basic Sewing Operator பயிற்சி வழங்ப்பட்டுள்ளது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தேனி மூலமாக பயற்சி பெற்ற 19 நபர்களுக்கு 80% தொகை ரூ.49,400 வழங்கப்பட்டுள்ளது. பயிற்சி வழங்கிய நிறுவனத்திற்கு 80% ரூ.135430 வழங்கப்பட்டுள்ளது. பயிற்சி பெற்றவர்களில் 70% விழுக்காடு பயிற்சியாளர்கள் ஏதேனும் நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்ட பின்னர் எஞ்சிய 20% தொகை வழங்கப்படும்.

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

வேலைநாடுநர்கள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு மாதமும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் ஆலோசனையின் பேரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டுவருகிறது.

தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

2018 ம் ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி ஆகிய இரண்டு மாதங்களில் 30.01.2018 மற்றும் 28.02.2018 ஆகிய தினங்களில் தனியார்த்துறை, வேலைவாய்ப்பு ’முகாம் நடத்தப்பட்டது. இதில் இரண்டு நிறுவனங்கள் கலந்து 43 வேலைநாடுநர்கள் பணியமர்த்தப்பட்டனர்.
மேற்காணும் அரசாணையின்படி, தேனி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து மாபெறும் தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் 15.10.2017 அன்று தேனி கம்மவார் சங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கொடுவிலார்பட்டி, தேனியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களது தலைமையில் நடத்தப்பட்டது. மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் இம்முகாமினை துவக்கிவைத்து தோ்வு செய்யப்பட்ட வேலைநாடுநர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கி சிறப்புரையாற்றினார்கள். மாண்புமிகு தொழலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் மற்றும் இயக்குநர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, சென்னை ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
இம்முகாமில் 1750 வேலைநாடுநர்கள் மற்றும் 70 தனியார் வேலையளிப்போர் கலந்து கொண்டனர். 150 வேலைநாடுநர்கள் பல்வேறு நிறுவனங்களால் தோ்வு செய்யப்பட்டு. அவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.