வெல்லும் தமிழ்ப் பெண்கள் – தமிழ்நாட்டின் சாதனைப் பெண்களின் மாபெரும் வெற்றிக் கொண்டாட்டம். 12.12.2025
வெளியிடப்பட்ட தேதி : 15/12/2025
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், ‘’வெல்லும் தமிழ்ப் பெண்கள்’’ தமிழ்நாட்டின் சாதனைப் பெண்களின் மாபெரும் வெற்றிக் கொண்டாட்டம் மற்றும் தமிழ்நாடு முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் 2-ஆவது கட்ட விரிவாக்கத்தை மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் காணொளிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, தேனி மாவட்டத்தில் 1750 மகளிர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான வங்கிப் பற்று அட்டைகளை வழங்கினார் (PDF 310KB)


