வேளாண்மைத் துறை
மாவட்டத்தில் 30 விழுக்காடு மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களையே தங்கள் வாழ்வாதாரமாக் கொண்டுள்ளதால் , விவசாயமே மாவட்ட பொருளாதாரத்தின் மிக முக்கியமான பிரிவாக விளங்குகிறது. விவசாய உற்பத்தியில் நிலைத்தன்மையை உறுதி செய்யவும், மக்கள்தொகை வளர்ச்சிக்கேற்ப உற்பத்தியை உயர்த்தவும் தேவையான, அரசின் கொள்கைகளும் ,நோக்கங்களும் வகுக்கப்படுகின்றன. இதன் மூலம் விவாசாயம் சார்ந்த தொழிழகங்களின் மூலப்பொருள்கள் கிடைப்பது உறுதிசெய்யப்படுவதுடன், ஊரக மக்களுக்கு வேலைவாய்ப்பு வசதிகள் கிடைக்கப்பெறுகிறது
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை (PDF 171 KB)