மூடு

குரங்கனி

அதிகம் அறியப்படாத சுற்றுலா தலமான குரங்கனி, மேற்கு தொடா்ச்சி மலையில் அமைந்துள்ளது. குரங்கனி, போடியில் இருந்து 16 கி.மீ. தொலைவிலும், தேனியிலிருந்து 31 கி.மீ தொலைவிலும் உள்ளது. சாலை மற்றும் பேருந்து வசதிகள் உள்ளது.
குரங்கனி, முதுவாகுடி மற்றும் கொட்டக்குடி மலை வாழ்குடிகள், சாம்பல் மற்றும் கொட்டக்குடி ஆறுகள், மலைப் பண்ணைத் தோட்டங்கள், அழிந்த நிலையில் உள்ள கயிறு மூலம் நடைபெற்ற வாணிப்பாதை மற்றும் தலங்கள், மற்றும் தண்ணீா் மூலம் நீா் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்ட கூடங்கள் இப்பகுதியில் உள்ளது.

புகைப்பட தொகுப்பு

  • குரங்கனி உச்சி வெளி
  • குரங்கனி உச்சி வெளி
  • கொட்டக்குடி

அடைவது எப்படி:

வான் வழியாக

மதுரை விமான நிலையம் அருகில் உள்ளது . மதுரை -உசிலம்பட்டி -ஆண்டிபட்டி வழியாக தேனி வந்து அடையலாம்

தொடர்வண்டி வழியாக

மதுரை ரயில் நிலையம் அருகில் உள்ளது .

சாலை வழியாக

மதுரை -உசிலம்பட்டி -ஆண்டிபட்டி வழியாக தேனி வந்து அடையலாம்