மூடு

மேகமைலை

மேகமலை கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள மலைப்பகுதியாகும். இங்கு தேயிலை, ஏலம் அதிகப் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இயற்கை இங்கு கண்கவா் காட்சிப் பெட்டகமாக காட்சியளிக்கிறது. மேகமலை, மணலாறு, மகாராஜா மெட்டு, தேயிலை மலைப்பண்ணைத் தோட்டங்கள் போன்ற பகுதிகளும், மேகமலை 1, மேகமலை 2 (தூவானம்), மகாராஜா மெட்டு, மணலாறு மற்றும், மேல்மணலாற போன்ற அணைகள், தண்ணீா் மூலம் நீா் மின்சாரம் தயாரிக்கம் கூடங்கள் இப்பகுதியிலுள்ளது. அரிதான பசுமை மாறாத காடுகள், அரிதான தாவரங்கள் மற்றும் விலங்குகள், யானைகள், காட்டு எருமைகள், மான்கள் மற்றும் புலிகள் போன்றவைகள் பார்வையிடுவதற்கு ஏற்ற தலமாகும். தமிழ்நாடு அரசால் அதிகம் பிரபலமடையாத சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு : 04554 – 232225

புகைப்பட தொகுப்பு

  • மேகமலை

அடைவது எப்படி:

வான் வழியாக

Nearest Airport at Madurai.

தொடர்வண்டி வழியாக

மதுரை ரயில் நிலையம் அருகில் உள்ளது .

சாலை வழியாக

மதுரை -உசிலம்பட்டி -ஆண்டிபட்டி வழியாக தேனி வந்து அடையலாம்