மூடு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை

தேனி மாவட்டம்

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள்.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை.

பிற்படுத்தப்பட்ட மிகப்பிற்படுத்தப்பட்ட சீர்மரபினர் மற்றும் சி’றுபான்மையினர் சமூகத்தி்னர் சமூகம் கல்வி மற்றும் பொருளாதார நிலையில் மேம்பாடு அடைபவதற்கு இணக்கமாதொரு சூழலை ஏற்படுத்தம் நோக்கில் பல்வேறு நலத்திட்டங்களை வகுத்து செயல்படுத்த இவ்வரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் வகுப்பைச் சோ்ந்தவர்கள் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில் போன்ற நிலைகளில் தங்களது நிலையினை உயர்த்திக்கொள்வதற்கான வாய்ப்புகள் அளிக்கும் பொருட்டும், சமூதாயத்திலுள்ள இதர பிரிவினருக்கு சமமான நிலையினை அனைத்து துறைகளிலும் அவா்கள் அடைவதை இலக்காக கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தி வருகின்றன.

அம்மக்களின் மேம்பாட்டிற்காக செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்த விவரங்கள், அத்திட்டத்தின் கீழ் பயன்பெற தேவையானத் தகுதிகள், அணுக வேண்டிய அலுவலர்கள் ஆகிய விபரங்கள் பின்வருமாறு அளி்க்கப்படுகின்றன.

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை

  • இலவச வீட்டு மனைப்பட்டா
  • உணவு மானியம்
  • இலவசக்கல்வி – பட்டப்படிப்பு
  • இலவசக்கல்வி – தொழிற்கல்வி
  • இலவசக்கல்வி – பாலிடெக்னிக்
  • இலவச கல்வி உதவித்தொகை
  • தொழிற்கல்விக்கான இலவச கல்வி உதவித்தொகை (பொறியியல், மருத்துவம், விவசாயம் , கால்நடை மற்றும் சட்டப்படிப்பு)
  • 3ஆண்டு டிப்ளமோ படிப்பதற்கான இலவசத்தகுதி உதவித்தொகை (பாலிடெக்னிக்)
  • இலவச மிதிவண்டிகள் வழங்கும் திட்டம்.
  • சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கான மானியக்கடன் வழங்கும் திட்டம்.
  • இயற்கை மரணம் – ஈமச்சடங்கு உதவித்தொகை
  • அகில இந்திய குடிமைப்பயிற்சி வகுப்பு
  • கிராமப்புற பெண் கல்வி உதவித்தொகை (மிபிவ.சீம)
  • தனிநபர் கடனுதவி
  • தகுதி அடிப்பைடயிலான கல்வி உதவி்த்தொகை
  • கறவை மாட்டிற்கான கடன்

பேரறிஞர் அண்ணா விருது.

  • பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை
  • சிறுபான்மையினருக்கான பள்ளிமேற்படிப்பு கல்வி உதவி்த்தொகை
  • தலைசிறந்த தனியார் பள்ளிகள் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை.
  • பிவஃமிபிவஃசீம(ம) சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு வழிகாட்டி நூல்கள்.
  • பிவஃமிபிவஃசீம(ம) சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கான பள்ளி சீருடைகள்
  • பிவஃமிபிவஃசீம(ம) சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கான இலவச மிதிவண்டிகள்.
  • இலவச தையல் இயந்திரம்
  • இலவச தேய்ப்பு பெட்டி.

கல்வி உதவித்தொகை.

  • பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு ( பிவ,மிபிவ ஃ சீம )
  • பிவ, மிபிவ மற்றும் சீம நல மாணவ, மாணவிகளுக்கு பின்வரும் கல்வி உதவி்த்தொகை திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன.
  • பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை (6 முதல் 10 வகுப்பு வரை ஆங்கில வழிக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு )
  • பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை(11 முதல் பி.ஹெச்.டி வரை)
  • இலவச கல்வி உதவித்தொகை(3 வருட பட்டப்படிப்பு, அரசு ஃஅரசு உதவிபெறும் கல்லூரி, கலை( ம ) அறிவியல்)
  • இலவச கல்வி உதவித்தொகை
  • ( 3 வருட இளங்கலை பாலிடெக்னிக் )
  • இலவச தொழற்கல்வி

குறிப்பு – அனைத்து கல்வி உதவித்தொகையும் சம்பந்தப்பட்ட கல்வி நிலையங்கள் மூலமே பெறப்பட்டு ஆண்டுதோறும் வழங்கப்பட்டுவருகிறது..
மேலும் அனைத்து கல்வி உதவித்தொகை பெறுவதற்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2.00 இலட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
கிராமப்புற பெண் கல்வி உதவித்தொகை (மிபிவ (ம ) சீம வகுப்பு பெண்களுக்கு மட்டும்.
கிராமப்புறங்களில் அமைந்துள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும பள்ளிகளில் 3 ஆம் வகுப்பு முதல் 5 வகுப்பு வரை பயிலும் மகிப்பிற்படுத்ப்பட்டோர் / சீர்மரபினர் வகுப்பினை சார்ந்த பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.500/- 6ம் வகுப்பு ஆண்டுக்கு ரூ.1000/-ஊக்கத்தொகையாக வழங்கப்படும். ஆதரவற்ற விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்டர்வகளின் பெண் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

தேனி முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம்.

  • தமிழ்நாட்டுலுள்ள இஸ்லாமிய மதத்தைச் சார்ந்த வயது முதிர்ந்த ஆதரவற்ற, கணவனால் கைவிடப்பட்ட முஸ்லீம் மகளிர் நலனுக்காக மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவு சங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
  • வாழ்வாதாரத்தை மே்படுத்தும் வகையில் உதவிகள் மற்’றும் மேவக்கேற்ப தையல், பூ வேலைப்பாடுகள் மற்றும் காலணிகள் செய்வது, கைவினைப் பொருட்கள் செய்ய பயிற்சி அளித்தல் மற்றும் சிறு தொழில் துவக்க உதவிடல்.
  • மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள முஸ்லீம் மகளிருக்கு மத்திய மற்றும் இதர மாநில அரசுகளிடமிருந்து சலுகைகள் கிடைக்க வழிவகை செய்து அவர்களை அத்துறையில் தேர்ச்சி பெறச்செய்தல்.
  • வியாபாரம். தொழில் மற்றும் கல்வித்துறையில் முஸ்லீம் மகளிர் உறுப்பினர்களுக்கு உதவி செய்து அவர்களை அத்துறையில் தோ்ச்சிபெறச்செய்தல்.

கல்வி உதவித்தொகை.

சிறுபான்மையினர்.

தமிழ்நாட்டில் மைய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்ப்பட்டள்ள இஸ்லாமியர், கிறித்துவர், சீக்கியர், புத்தமத்தினர் பார்சி மற்றும் ஜைன மதத்தை சார்ந்து அரசு, அரசு உதவிபெ’றும் மற்றும் மைய ஃ மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்கள் 2017-2018 கல்வியாண்டில் ஒன்’று முதல் 10’ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகையும். 11-ம் வகுப்பு முதல்ஆராய்ச்சி படிப்பு வரை (’ஐடிஐ, ஐடிசி, வாழ்க்கை தொழற்கல்வி(Vocational)> பாலிடெக்னிக். செவிலியர் / ஆசிரியர் பட்டயப் படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் உட்பட) பயில்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு உதவித்தொகையும் மற்றும் தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி பயில்பவர்களுக்கும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெ’றுவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள்.

சிறுபான்மையினர் கல்வி உதவி்த்தொகை விண்ணப்பிப்பதற்கான இணையதளம் :http://nsp.gov.in/- விபரங்கள்

கல்வி உதவி்தொகை
கல்வி உதவி்தொகை பயிலும்வகுப்பு பாதுகாவலர் ஆண்டு வருமானம்
பள்ளி படிப்பு 1 ம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை ரூ.1,00,000
பள்ளி மேற்படிப்பு 11 முதல் பி.ஹெச்டி வரை ரூ.2,00,000
தகுதி ( ம ) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை தொழிற்கல்வி – தொழிற்நுட்பகல்வி ரூ.2,50,000

கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தகுதிகள்.

  • மாணவ / மாணவியர்கள் ஆண்டு இறுதி தோ்வில் 50% மதிப்பெண்களுக்கு குறையாமல் பெற்றிருத்தல் வேண்டும்.
  • 30% பெண்களுக்கு ஒதுக்கீடு வழங்கப்படும்.
  • மாணவர்களுக்கு சொந்த மாவட்டத்தில் மட்டுமே கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
  • ஒரு குடும்பத்தில் 2 நபருக்கு மட்டுமே கல்வி உதவி்த்தொகை வழங்கப்படும்.
  • மாணவர்கள் பிற்படுத்தப்பட்டோர் – ஆதிதிராவிடர் நலம் – இதர துறைகள். நல வாரியங்கள் போன்ற துறைகளில் ஏதேனும் ஒரு தலைப்பின் கீழ் மட்டுமே கல்வி உதவித்தொகை பெற முடியும்.

உலமாக்கள் மற்றும் பணியாளர் நலவாரியம்

உலமாக்கள் மற்றும பணியாளர்கள் சமூக, பொருளாதார மற்றும் கல்வி ஆகிய நிலைகளில் முன்னேற்றத்தை அடைவதற்கென உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் மதரஸாக்களின் பணிபுாியும் ஆலிம்கள்.பேஷ் இமாம்கள். அரபி ஆசிரியர்கள் – ஆசிரியைகள் , மோதினார்கள். பிலால்கள் மற்றும் இதர பணியாளர்கள் . தர்காக்கள். அடக்கஸ்தலங்கள். தைக்காக்கள். ஆஷீர்கானாக்கள் மற்’றும் முஸ்லீம் அனாதைகளகள் இல்லங்கள் ஆகியவற்றில் பணிபுரீயும் பணியார்கள் உறுப்பினராகவும நலத்திட்ட உதவிகள் பெற தககுதியுடையவராவர்.

உறுப்பிர் 18 வயது நிறைவு செய்த 60 வயதுக்குள் இருத்தல் வேண்டும். பதிவு பெற்ற உறுப்பினருக்கும் ஓர் அடையாள அட்டை கட்டணமின்றி வழங்கப்படும். உறுப்பினர் பதிவு செய்து 3 ஆண்டுகள் முடியும் தருவாயில் பதிவை மீண்டும் புதுப்பிக்க வேண்டும்.
உலமாக்கள் மற்றும் பணியார்க்ள நல வாரியத்தில் உறுப்பின’ர்களுக்கு வழங்கப்படும். நலத்திட்ட உதவிகள் விபரம்.

விபத்து காப்பீடு திட்டம்

  • அ.விபத்தினால் மரம் ஏற்பட்டால் உதவித்தொகை 1,00,000
  • விபத்தினால் மரம் ஏற்பட்டால் ஊனத்தின் தன்மைக்கேற்ப 10,000 முதல் 1,00,000 வரை
  • இயற்கை மரண உதவித்தொகை 15,000
  • ஈமச்சடங்கு செலவிற்கான உதவி்த்தொகை 2,000

கல்வி உதவித்தொகை

  • 10 ஆம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தைகளுக்கு ரூ. 1000
  • 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.1000
  • 11 ஆம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தைகளுக்கு ரூ. 1000
  • 12 ஆம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தைகளுக்கு. ரூ. 1500
  • 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு. ரூ.1500
  • முறையான பட்டப்படிப்பு ரூ.1500
  • மாணவர் இல்ல வசதியுடன் முறையான பட்டபடிப்பு ரூ. 1750
  • முறையான பட்ட மேற்படிப்பு ரூ. 4000
  • மாணவர் இல்ல வசதியுடன் முறையான பட்ட மேற்படிப்புக்கு ரூ.5000
  • >மாணவ இல்ல வசதியுடன் தொழிற்கல்வி பட்டபடிப்பு ரூ.6000
  • தொழில் கல்வி பட்ட மேற்படிப்பு 8000
  • மாணவ இல்ல வசதியுடன் தொழிற்கல்வி பட்ட மேந்படிப்பு. ரூ. 1000
  • மாணவர் இல்ல வசதியுடன் ஐடிஐ அல்லது பாலிடெக்னிக் படிப்பு. ரூ.1200
  • திருமண உதவித்தொகை ரூ. 2000

மகப்பேறு உதவித்தொகை

  • மகப்பேறு மாதம் ஒன்’றுக்கு ரூ.1000 வீதம் (6 மாதங்களுக்கு) ரூ.6000
  • கருச்சிதைவு ஃ கருக்கலைப்பு ரூ.3000
  • கண் கண்ணாடி செலவுத்தொகை ஈடு செய்தல் ரூ.500(அதிகபட்சம்)
  • முதியோர் உதவித்தொகை பிரதி மாதம். ரூ.1000

ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ள அரசு நிதி உதவி.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிருத்துவ பிரிவினரும் புனிதப் பயணமாக ஜெருசலேம் செல்வதற்கு நிதியுதவி வழங்கும் திட்டம் 2011-2012 ’ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டிலும் 500 கிறித்துவர்க்ள் புனித பயணம் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கென அரசின் நிதி உதவியாக நபர் ஒருவருக்கு ’’’’ரூ.20000வ’ீதம் வழங்கப்பட்டுவருகிறது.
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்.

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர். பொருளாதார மேம்பாட்டுக்கழகம். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூக – பொருளாதார நிலையினை மேம்படுத்தும் வகையில் பல்வேறு கடன் திட்டங்களின் கீழ் நிதியுதவி வழங்கி வருகிறது. பயனாளிகளுக்கு கடன் தொகைகளை வழங்கவதற்கும், வசூல் செய்வதற்கும் பின்வரும் நிறுவனங்கள் இக்கழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட துணை முகவர்களாக செயல்படுகின்றன. அவையாவன தாய்கோ வங்கி, தமிழ்நாடு கைத்தறி வளர்ச்சி கழகம், கூட்டுறவு வங்கிகள் – தொ.வே.கூ.க.சங்கம் – நகர கூட்டுறவு வங்கிகள், தனியார் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் ஆவின் நிலையங்கள் போன்றவையாகும்.

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்

சமூதாயத்தில் பொருளாதாரம் மற்றும் கல்வியில் பின்தங்கிய முஸ்லீம்கள், கிருத்துவர்கள், சீக்கியர்கள், புத்தமதத்தவர்கள், பார்சியர்கள், ஜெயின் பிரிவைச் சார்ந்த சிறுபான்மையின மக்களை மேம்படுத்துவதற்காக தனிநபர் கடன், சிறுகடன் மற்றும் கல்விக் கடன் ஆகியவற்றை வழங்குவதற்காக தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் துவக்கப்பட்டது. தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதிக் கழக்த்தின் முகவராக இக்கழகம் செயல்பட்டு வருகின்றது.